சோழ மன்னர்கள் காலத்தில் இப்பகுதி 'சதுர்வேதி மங்கலம்' என்று அழைக்கப்பட்டது. அதுவே தமிழில் 'நால்வேத மங்கலம்' என்று ஆகி, பின்னர் மருவி 'நாலூர்' என்ற பெயர் பெற்றதாகக் கூறுவர். மயானங்கள் நான்கு உள்ளன. கச்சி மயானம், காழி மயானம், கடவூர் மயானம் மற்றும் நாலூர் மயானம். மயானம் என்பது 'மெய்ஞானம்' என்றும் வழங்கப்படும்.
மூலவர் 'ஞானபரமேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சிறிய லிங்க மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'ஞானாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், பைரவர், சனீஸ்வரர், சூரியன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
இது கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்.
ஆபஸ்தம்ப முனிவர் வழிபட்ட தலம்.
இக்கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் நாலூர் பெருந்திருக்கோயில் அமைந்துள்ளது.
சம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|